/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது
/
லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது
ADDED : பிப் 10, 2025 01:57 AM
ஈரோடு : ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள ஒரு மண்டிக்கு, ஆந்திராவில் லாரியில் தக்காளி வந்தது. டிரேக்களை பெறுவதற்காக, லாரி டிரைவர்கள் இருவர், மார்க்கெட்டை ஒட்டிய சாலையில், லாரியை நிறுத்திவிட்டு துாங்கினர்.
நள்ளிரவில் வந்த நான்கு பேர், இருவரையும் கத்தி முனையில் மிரட்டி, 18 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், பணம் பறித்த கும்பலை தேடி வந்தனர். இது தொடர்பாக வீரப்பன்சத்திரம், ஏ.பி.டி.சாலை, மிட்டாய்கார தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சண்முகம், 19; வீரப்பன்சத்திரம், சாந்தாங்காடு சண்முகம் மகன் சக்திவேல், 19; மற்றும் ௧௫ வயது சிறுவனை கைது செய்தனர்.