ADDED : ஜூலை 24, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:மொடக்குறிச்சி
அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில், பீஹார் மாநில தொழிலாளி ஒருவரை,
மூன்று பேர் கும்பல் மிரட்டி, பணம் மற்றும் மொபைல்போனை பறித்து சென்றனர்.
அவர் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில்
தொழிலாளியை தாக்கிய ஈரோடு லக்காபுரம் வடிவேல் மகன்
தட்சிணாமூர்த்தி, 19, லக்காபுரம் கரட்டாங்காடு அர்ஜூனன் மகன்
கவின், 26; திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாலாஜி, 30, என தெரிய
வந்தது. மூவரும் இதே பகுதியில் கூலி வேலை செய்து வருவது தெரிய வந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு
கிளை சிறையில் அடைத்தனர்.
