/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
/
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூவர் கைது
ADDED : மே 21, 2025 01:10 AM
அந்தியூர், அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனச்சரகம், முரளி மேற்கு பீட்டில், ரேஞ்சர் ராஜா தலைமையில் ஊழியர்கள் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
மலையனுார் ஏரி சரகத்தில் திரிந்த மூன்று பேர் வனத்துறையினரை கண்டதும் ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், எண்ணமங்கலம், மலையனுாரை சேர்ந்த சடையன் மகன் மாதேஷ், 40; மற்றொரு மாதேஷ், 41; பர்கூர், கொங்காடை வெள்ளியங்கிரி, 37, ஆகியோர் என தெரிந்தது. விலங்கு வேட்டையாட துப்பாக்கியுடன் வந்தது தெரிய வந்தது.
மூவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருநது ஒற்றைக்குழல் துப்பாக்கி, ஐந்து தோட்டா, கத்தி, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
மூவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.