/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவியிடம் செல்போன் பறித்த மூன்று பேர் கைது
/
மாணவியிடம் செல்போன் பறித்த மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 17, 2025 02:14 AM
காங்கேயம், காங்கேயம் அருகே திட்டுப்பாறை, தாமரைகாட்டுவலசை சேர்ந்த தொழிலாளி மோகனுடைய, 17 வயது மகள் பிளஸ் ௨ முடித்து, கல்லுாரி சேரவுள்ளார். தையல் பயிற்சி வகுப்பு சென்னிமலை சென்று வருகிறார். திட்டுப்பாறை அருகே பஸ் நிறுத்தத்தில் இருந்து நேற்று மதியம், 2:00 மணிளவில் தனியாக நடந்து சென்ற மாணவியை, பல்சர் பைக்கில் மூன்று இளைஞர்கள் பின் தொடர்ந்தனர். திடீரென மாணவியின் வாயை பொத்தி, 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து, அவரை தள்ளிவிட்டு பைக்கில் பறந்து விட்டனர்.
அப்போது திட்டுப்பாறை அருகே சோதனைச்சாவடியில், காங்கேயம் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் ஒரே பைக்கில் வந்த மூன்று பேரையும் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசவே, காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் தேனி மாவட்டம் சின்னமனுார், அஜித், 25, சக்திவேல், 25; வெள்ளகோவில், நடேசன்நகர் பாரதி, 25, என்பதும், மாணவியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்தனர்.