/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முன்விரோதத்தால் விபரீதம் ஊழியரை 'குத்திய' மூவர் கைது
/
முன்விரோதத்தால் விபரீதம் ஊழியரை 'குத்திய' மூவர் கைது
முன்விரோதத்தால் விபரீதம் ஊழியரை 'குத்திய' மூவர் கைது
முன்விரோதத்தால் விபரீதம் ஊழியரை 'குத்திய' மூவர் கைது
ADDED : ஜூன் 25, 2025 01:14 AM
ஈரோடு,
தாளவாடி, திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் ரங்கராஜ், 23; ஈரோடு, யு.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் சேலம் மாவட்டம் நிலவாரபட்டியை சேர்ந்த சபரிநாதன், 35; இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் ரங்கராஜ் வேலைக்கு தாமதமாக வந்ததாக, மேலாளரிடம் சபரிநாதன் புகார் கூறியதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரங்கராஜ், அவரது நண்பரான ஈரோடு மாவட்டம் தலமலை, தொட்டபுரத்தை சேர்ந்த மாதவன், 23, ஆகிய இருவரும், நிறுவனத்தின் விடுதி முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வந்த சபரிநாதன், நண்பர்களான ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து மூன்றாவது வீதி மணிகண்டன், 27; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முருங்கைகாடு மோகன மணிகண்டன், 30, ஆகியோருடன் சேர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரங்கராஜை கத்தியால் குத்தியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி சபரிநாதன், மணிகண்டன், மோகன மணிகண்டனை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.