/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஸ்பின்னிங் மில்லில் திருடிய மூவர் கைது
/
ஸ்பின்னிங் மில்லில் திருடிய மூவர் கைது
ADDED : ஜன 02, 2025 01:26 AM
கோபி, ஜன. 2-
கோபி அருகே, செயல்படாத ஸ்பின்னிங் மில்லில் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கோபி, கொளப்பலுார் அருகே யூனிட் நகரில், செயல்படாத தனியார் ஸ்பின்னிங் மில் வளாகத்தின் பின்புறம் வழியாக சுவர் ஏறி குதித்து, மூன்று மர்ம நபர்கள் இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு திருடி கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்நிறுவனத்தின் செக்யூரிட்டி ஜெயராமன், 55, கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் அந்த மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து, சிறுவலுார் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மூவரும், திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரை சேர்ந்த கவிராஜ், 27, மனோஜ், 19, மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி, வேலுசாமி 46, கொடுத்த புகார்படி, மூவரையும் சிறுவலுார் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும்,
அவர்கள் திருடிய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

