/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் மிதந்த மூன்று உடல்கள் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
/
வாய்க்காலில் மிதந்த மூன்று உடல்கள் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
வாய்க்காலில் மிதந்த மூன்று உடல்கள் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
வாய்க்காலில் மிதந்த மூன்று உடல்கள் 2 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
ADDED : டிச 07, 2024 07:39 AM
கோபி: கோபி அருகே கீழ் பவானி வாய்க்காலில் மிதந்த, இரு உடல்களின் அடையாளத்தை கடத்துார் போலீசார் கண்டறிந்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே செம்மாண்டபதி மற்றும் தொட்டிபாளையம் என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த மூன்று ஆண்களின் உடலை கடத்துார் போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர்.
இதில் தொட்டிபாளையத்தில் மீட்கப்பட்டவர், சத்தியை சேர்ந்த ரங்கசாமி, 84, என தெரிய வந்தது. இதனால் அவரின்
உடலை, உடற்கூறு பரிசோதனைக்கு பின், குடும்பத்தாரிடம் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். இதேபோல் செம்மாண்டம்பதியில் மீட்கப்பட்டவர், குட்டகம் ரோட்டை சேர்ந்த, பழனிக்கவுண்டர், 84, என நேற்று தெரிந்தது. இவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். எஞ்சிய அடையாளம் தெரியாத,
மற்றொரு-வரின் உடல் குறித்து கடத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.