/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் மூன்று உடல்கள் மீட்பு
/
கீழ்பவானி வாய்க்காலில் மூன்று உடல்கள் மீட்பு
ADDED : டிச 06, 2024 07:45 AM
கோபி: கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த, அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் உடலை கடத்துார் போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.கோபி, எலத்துார் அருகே செம்மாண்டபதி, கீழ்பவானி வாய்க்காலில், அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத, இரு ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நம்பியூர் தீயணைப்பு துறையினர்,இரு ஆண் உடல்களையும் மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், கூடக்கரை அருகே தொட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த, மற்றொரு ஆணின் உடலை, தீயணைப்பு துறையினர் மீட்டனர். அந்த உடல் சத்தி அரசு மருத்துவமனைக்கு, கடத்துார் போலீசார் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத மூன்று ஆண்களும் எவ்வாறு இறந்தனர் என கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.