/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி மூன்று கல்லுாரி மாணவர்கள் காயம்
/
டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி மூன்று கல்லுாரி மாணவர்கள் காயம்
டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி மூன்று கல்லுாரி மாணவர்கள் காயம்
டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி மூன்று கல்லுாரி மாணவர்கள் காயம்
ADDED : ஆக 29, 2024 07:36 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி மூன்று கல்லுாரி மாணவர்கள் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், அன்னுார் அருகே செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 18. திருப்பூர் மாவட்டம் ஆலத்துாரை சேர்ந்தவர் கௌசிக், 18. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 20. இவர்கள் மூவரும், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று காலை கல்லுாரி செல்வதற்காக, ஹெல்மெட் அணியாமல் மூன்று பேரும் ஒரே பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை மோகனசுந்தரம் ஓட்டினார். புன்செய் புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் சென்றபோது, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் மூவரும், துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு, அன்னுார் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.