/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5000 லஞ்சம் வாங்கிய மூவருக்கு சிறை
/
ரூ.5000 லஞ்சம் வாங்கிய மூவருக்கு சிறை
ADDED : பிப் 17, 2024 02:30 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் ராமாயாள். தன் விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு கேட்டு, மின் வாரியத்தில் விண்ணப்பம் செய்தார். 2016ல் கோபி மின் உதவி செயற்பொறியாளர் கேசவன், உதவி பொறியாளர் விஸ்வராஜ், போர்மேன் பழனிசாமி ஆகியோர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
பணம் தர விரும்பாததால், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் அந்த பெண் புகார் தந்தார். போலீசார் அறிவுரைப்படி, மூவரிடமும் லஞ்ச பணத்தை அந்த பெண் கொடுத்தார். பணத்தை பெற்ற மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்து, கேசவன், விஸ்வராஜ், பழனிசாமிக்கு தலா, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.