/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாமியார் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்த மூவர்; அக்கம்பக்கத்தினர் வந்ததால் ஓட்டம் பிடித்தனர்
/
சாமியார் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்த மூவர்; அக்கம்பக்கத்தினர் வந்ததால் ஓட்டம் பிடித்தனர்
சாமியார் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்த மூவர்; அக்கம்பக்கத்தினர் வந்ததால் ஓட்டம் பிடித்தனர்
சாமியார் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்த மூவர்; அக்கம்பக்கத்தினர் வந்ததால் ஓட்டம் பிடித்தனர்
ADDED : டிச 20, 2024 07:03 AM
புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 56, நுாற்பாலை உரிமையாளர். இவரது மனைவி உமா கவுரி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த, 17ம் தேதி காலை வழக்கம் போல் உமாகவுரி பள்ளிக்கு சென்று விட்டார். தந்தையும், மகளும் வீட்டில் இருந்தனர்.
அப்போது பொலிரோ ஜீப்பில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் சாமியார் வேடத்தில் பூமாலை, பிரசாதங்களுடன் வீட்டுக்கு வந்தனர். ராஜேந்திரனின் மகள் கதவை திறக்கவே, அப்பா இல்லையா? என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தனர். அப்போது குளித்துவிட்டு வந்த ராஜேந்திரனிடம், காசி சாமியார்கள் எனவும், பண்ணாரி கோவிலுக்கு வந்தோம், பூஜை செய்ய சொல்லி உத்தரவு வந்துள்ளது; பூஜை அறையை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.
அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்த ராஜேந்திரன், மகளிடம் அக்கம்பக்கம் உள்ளவர்களை அழைத்து வருமாறு கூறி வெளியே அனுப்பியுள்ளார். இதை தொடர்ந்து அந்த கும்பல் பூஜையை தொடர்ந்துள்ளது. அதேசமயம் அருகில் உள்ளோரை அழைத்துக்கொண்டு மகள் வந்துள்ளார். உஷாரான கும்பல் தாங்கள் வந்த ஜீப்பில் ஏறி தப்பியது. இதுகுறித்து புன்செய்புளியம்பட்டி போலீசில், ராஜேந்திரன் புகாரளித்துள்ளார். அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், சாமியார் கும்பல் வந்த ஜீப்பின் பதிவெண் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் புன்செய்புளியம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், தங்க கம்மலை பறித்து சென்றனர். இந்நிலையில் பெண் உட்பட மூன்று பேர் சாமியார் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்த சம்பவம், புளியம்பட்டி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.