ADDED : ஆக 27, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, பெரிய சேமூர் தட்டடான் காடு கொங்குவேலா நகர் ராசப்பன் மகன் சக்தி
வேல், 32. தனது ஸ்பிளண்டர் பைக்கை கடந்த, 16 மதியம் 1:00 மணிக்கு பாப்பாத்தி காடு பகுதியில் நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது பைக் திருட்டு போயிருந்தது. வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி, சித்தோடு பூக்கடை வீதி மனோ-கரன் மகன் எலக்ட்ரீஷியன் ஹரிபிரசாத், 22, கொங்கம்பாளையம் எல்.பி.பி., நகர் சங்கர் மகன் மெக்கானிக் மணிகண்டன், 29, மற்றும் வீரப்பன்சத்திரம் ஈஸ்வரன் மகன் மனோஜ், 19, ஆகிய மூவரை கைது செய்தனர்.
