ADDED : ஆக 27, 2026 03:23 AM
ஈரோடு: ஈரோடு அடுத்த நசியனுார் சி.எஸ்.ஐ., வீதியை சேர்ந்தவர் கர்ணன், 58, பெயின்டர். வேலை இல்லாதபோது சோளக்கருது வியாபாரமும் செய்து வந்தார். நேற்று முன்தினம் மொபட்டில் உழவர் சந்தையில் சோளக்கருது வாங்கி விற்பனை செய்து, அவ-ருக்கு தெரிந்த மணிகண்டன் என்பவருடன் வில்லரசம்பட்டி நால் ரோட்டில், செங்கோடம்
பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம், மொபட்டின் பின்புறம் மோதியது. இதில், நிலைதடுமாறி கர்ணன் அவ்வழி-யாக வந்த, தனியார் டவுன் பஸ்சின் பின்புற சக்கரத்தில் மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த கர்ணனை, அவருடன் வந்த மணிகண்டன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சரக்கு வாகன டிரைவர் அப்பாஸ், தனியார் பஸ் டிரைவர் லோகேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
