ADDED : செப் 02, 2025 01:02 AM
ஈரோடு:ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், காமராஜர் நகரை சேர்ந்த பூபதி மனைவி செங்கொடி, 26; பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. செங்கொடியின் தந்தை மோகன் அளித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
* திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கஸ்துாரிபாளையம் கட்டட மேஸ்திரி ரமேஷ் மகள் சிவஸ்ரீ, 17; ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். கல்லுாரி பஸ்சில் சென்று வந்தார். கடந்த, 30ம் தேதி கல்லுாரிக்கு பஸ்சில் சென்றார். அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. ரமேஷ் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
* திங்களூர் அருகே கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 44, டெய்லர்; கடந்த மாதம், 19ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி அய்யம்மாள் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.