/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்று பேரிடம் விசாரணை மீண்டும் சிறையில் அடைப்பு
/
மூன்று பேரிடம் விசாரணை மீண்டும் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 10, 2025 01:20 AM
தாராபுரம், தாராபுரத்தில், வழக்கறிஞர் முருகானந்தம் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரை கஸ்டடியில் விசாரித்த போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த ஜூலை, 28ல், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், ஆறு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தனிப்படை போலீசார் 12 பேரை கைது செய்தனர். அவர்களில் தண்டபாணி, தட்சிணாமூர்த்தி, நாட்டுத்துரை ஆகிய மூவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களை, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின் பேரில், மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.