/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லிப்ட்டில் சிக்கிய மூவர் ஜி.ஹெச்.,ல் 'திக்திக்'
/
லிப்ட்டில் சிக்கிய மூவர் ஜி.ஹெச்.,ல் 'திக்திக்'
ADDED : ஜூலை 23, 2025 02:05 AM
ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்நோக்கு மருத்துவ பிரிவு உள்ளது. இங்கு லிப்ட் வசதியம் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பழனியம்மாள், 49, பொன்னுசாமி, 59, பவானி, மாயபுரத்தை சேர்ந்த கோபி, 28, ஆகியோர் நேற்று மதியம், ௩:௨௦ மணியில் லிப்டில் சென்றனர்.
இரண்டாவது தளம் சென்றபோது பாதி வழியில் நின்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து மக்கள் லிப்ட்டை இயக்க முயற்சித்தனர். முடியாததால் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் செல்வதற்குள், லிப்ட் ஆப்பரேட்டர் மற்றும் பொதுமக்கள் இணைந்து லிப்ட்டை இயங்க செய்தனர். இதை தொடர்ந்து பதற்றமான பரபரப்பு முடிவுக்கு வந்தது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்: மக்களுக்கு அழைப்பு
கரூர், ஜூலை 23-
மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், இன்று நடக்கிறது. அதன்படி, கரூர் மாநகராட்சியில் தான்தோன்றிமலை ரெட்டியார் திருமண மண்டபத்தில், 37வது வார்டுக்கும், குளித்தலை வைகைநல்லுார் அக்ரஹாரம் நல்லுசாமி திருமண மண்டபத்தில், குளித்தலை நகராட்சியின், 1, 2, 3 ஆகிய வார்டுக்கும், கரூர் அருகே, மறவாபாளையம் அருண் மஹாலில், நெரூர் தெற்கு பஞ்சாயத்துக்கும், அரவக்குறிச்சி அருகே பண்ணப்பட்டி பிரிமியர் மஹாலில், எருமார்பட்டி, தெத்துப்பட்டி, பெரியமஞ்சுவெளி ஆகிய பஞ்சாயத்துகளுக்கு நடக்கிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.