/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் அதிரடி கைது
/
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் அதிரடி கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் அதிரடி கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் அதிரடி கைது
ADDED : பிப் 15, 2024 10:59 AM
ஈரோடு: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஓடபட்டியை சேர்ந்தவர் கணேசன், 57. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா, மங்கலம் சாலையில் வசிக்கிறார். ஈரோடு தாலுகா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆளில்லாத வீட்டில் புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழகம், புதுச்சேரியில், 74 வழக்குகள் உள்ளன. இதில் 15 வழக்குகளில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
* ஈரோடு, நடராஜா தியேட்டர் பின்புற பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன், 34. தற்போது சோலார் பாலுசாமி நகரில் வசிக்கிறார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பண்டாரி கோவில் வீதியை சேர்ந்த ஆனந்த ராஜ், 30. இருவரையும் கடந்த அக்., 18ல் சோலார் பாலுசாமி நகரில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான வீட்டில், 50 கிலோ போதை பொருளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக, மதுவிலக்கு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில்
அடைத்தனர்.
குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மூவரையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று, ஈரோடு எஸ்.பி., ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதன்படி மூவரையும் குண்டாஸில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் இருக்கும் மூவருக்கும் அதற்கான நகல் வழங்கப்பட்டது.

