/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர்கள் மூன்று பேர் கைது
/
பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர்கள் மூன்று பேர் கைது
பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர்கள் மூன்று பேர் கைது
பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர்கள் மூன்று பேர் கைது
ADDED : ஜன 06, 2025 02:47 AM
கோபி,: கோபி அருகே பணம் கேட்டு மிரட்டிய புகாரில், ஊடகத்தினர் மூன்று பேரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அன்னுார் அருகே தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 47; அன்னுாரை சேர்ந்தவர் உதயக்-குமார். இருவரும் கூட்டாக சேர்ந்து, நம்பியூர் தாலுகா கூடக்கரை கிராமம் நல்லாண்டிபுதுாரில், வாங்கிய மானாவாரி நிலத்தை சமன் செய்யும் பணி நடந்தது. அப்போது பைக்கில் வந்த ஆறு பேர், பணி செய்வதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்-ளனர். பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளியிடம், 'நாங்கள் பத்தி-ரிக்கையாளர்கள்; பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் வேலை செய்ய விடமாட்டோம்' என்று மிரட்டியுள்ளனர். இதனால் அந்த தொழிலாளி, வெள்ளியங்கிரிக்கு தகவல் தெரி-வித்தார்.
வெள்ளியங்கிரி அங்கு சென்ற போது, தமிழ் அஞ்சல் நாளிதழ் நிருபர்கள் அஷ்ரப் அலி, மாரிச்சாமி, தமிழன் டி.வி., மணி-கண்டன், கொண்டையம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ், நம்-பியூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஒருவர் என ஆறு பேர் வெள்ளியங்கிரியிடம், தங்க-ளுக்கு தலா, 5,000 ரூபாய் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர்.
சட்டத்துக்கு புறம்பாக தான் எதுவும் செய்யவில்லை என்று கூறிய வெள்ளியங்கிரி, ஆறு பேர் மீதும் கடத்துார் போலீசாரிடம் புகார் செய்திருந்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், மணி-கண்டன், மாரிச்சாமி, வெங்கடேஷ் என மூவரை நேற்று கைது செய்தனர்.

