ADDED : ஜூலை 06, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி அருகே, தெருநாய்கள் கடித்து, மூன்று ஆடுகள் பலியானது.
கவுந்தப்பாடி
அருகே கண்ணாடிபுதுாரை சேர்ந்தவர் பழனியம்மாள், 55, விவசாயி; இவர்
தனது வீட்டின் அருகே தொழுவத்தில், பட்டியமைத்து, 8 ஆடுகள், 2 எருமை
மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு பட்டியியில்
கட்டியிருந்த, இரு வெள்ளாடு, ஒரு செம்மறி கிடாவை, தெருநாய்கள்
கடித்து இறந்து கிடந்தது. கவுந்தப்பாடி கால்நடை மருத்துவமனையின்
டாக்டர் குழுவினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, இறந்த ஆடுகளை
உடற்கூறு ஆய்வு செய்து, அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். தெருநாய்கள்
கடித்து மூன்று ஆடுகள் பலியானது, அப்பகுதியில் சோகத்தை
ஏற்படுத்தியது.
