/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்று கோவில் உண்டியலில் ரூ.10.98 லட்சம் காணிக்கை
/
மூன்று கோவில் உண்டியலில் ரூ.10.98 லட்சம் காணிக்கை
ADDED : டிச 12, 2024 01:56 AM
ஈரோடு, டிச. 12-
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோவில்களின் உண்டியல்களில், 10.98 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. மூன்று கோவில்களிலும், மூன்று மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது.அதன்படி நேற்று, 18 பொது உண்டியல்கள், கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், கல்லுாரி மாணவியர், பக்தர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம், 10 லட்சத்து, 98 ஆயிரத்து, 969 ரூபாய் ரொக்கம் கிடைத்தது. 16.200 கிராம் தங்கம், 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பவானி, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்குமார் தலைமையில், தக்கார் சுகுமார், பெருந்துறை ஆய்வாளர் குகன், செயல் அலுவலர் ஜெயலதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.