/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண்ணுடன் பிடிபட்ட டிப்பர் லாரி கண்டித்து உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'

ADDED : செப் 21, 2024 07:24 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த, கொங்கர்பாளையம்-வாணிப்-புத்துார் ரோட்டில், கோபி தாசில்தார் சரவணன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனையில் ஈடு-பட்டனர்.
அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கிராவல் மண் இருந்தது. ஆனால், முறையான அனுமதி இல்-லாமல், போலி அனுமதி சீட்டு வைத்திருந்தது தெரிந்தது. டிரைவ-ரான டி.என்.பாளையம், நேரு வீதியை சேர்ந்த மாதேஸ்வரன், 47, ஓட்டி வந்தார்.வாணிப்புத்துாரை சேர்ந்த விவேகானந்தனுக்கு சொந்தமான டிப்பர் லாரி எனவும் தெரிந்தது. பங்களாப்புதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒப்படைக்க
கொண்டு செல்லும்போது, வழியில் லாரியை நிறுத்தி விட்டு மாதேஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். வரு-வாய்துறை அதிகாரிகள் புகாரின்படி,
பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முறையான அனுமதி பெற்றே, கிராவல் மண் அள்ளி சென்றதா-கவும், வருவாய் துறையினரை கண்டித்தும், டி.என்.பாளையம் வட்டார டிப்பர் லாரி
உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்-தத்தில் ஈடுபட்டனர். 24 டிப்பர் லாரிகளை டி.என்.பாளையத்தில், காமராஜர் வீதி சாலையோரம்
நிறுத்தியிருந்தனர்.