ADDED : நவ 28, 2026 07:36 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:கோவையில்
செயல்படும் ஒரு கிரஷர் நிறுவனத்தில் இருந்து ஜல்லி ஏற்றிய ஒரு லாரி,
பெருந்துறைக்கு நேற்று மாலை புறப்பட்டது. திங்களூரை சேர்ந்த பிரபு,
32. ஓட்டினார். புன்செய் புளியம்பட்டி அடுத்த கோவில்புதுார் தண்ணீர்
பந்தல் இணைப்பு சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர
மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
லாரியில் இருந்த ஜல்லிக்கற்கள்
சிதறின. டிரைவர் பிரபு லேசான காயமடைந்தார். அதேசமயம் லாரி மோதியதில்
மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
