/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராஜகணபதி கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
/
ராஜகணபதி கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி, பா.வெள்ளாளபாளையம் அருகே பாலாஜி கார்டனில், ராஜகணபதி கோவில் கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் நேற்று காலை தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
இதையடுத்து கணபதி பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதியை தொடர்ந்து, காலை 6:00 முதல், 7:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.