/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
/
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : நவ 12, 2025 01:01 AM
திருப்பூர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் மணிஷ் நாரணவரே அறிக்கை:
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் - 1994ன் படி, அறுவை சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மருத்துவ சட்ட ரீதியானவை. எனவே, அவை, 10 ஆண்டு வரை பராமரிக்கப்பட வேண்டும். மேலும், இது குறித்து வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படவேண்டும். மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறவு முறைச் சான்றினை வழங்கும் போது, முறையான விசாரணை மேற்கொண்டு உறவு முறையினை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்து, அதற்கான சான்றிதழை அளிக்குமாறு அனைத்து தாசில்தார்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்துக்குப் புறம்பாக சிகிச்சையளிக்க கூடாது. தவறும் பட்சத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தனியார் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

