ADDED : ஆக 12, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
பவானி:ஆடி
அமாவாசை தினமான இன்று, பவானி கூடுதுறைக்கு வழக்கத்தை விட அதிக
எண்ணிக்கையில் மக்கள் வருவர். மூதாதையருக்கு திதி, தர்ப்பணம்
கொடுத்தும், புனித நீராடியும் வழிபட்டு செல்வர்.
இதற்காக
கோவில்வளாகம், கூடுதுறை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களில், 86
'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, 80 போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபடவுள்ளனர். காவிரி ஆற்றில் குறைந்தளவே தண்ணீரே
வருவதால், ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சிரமமின்றி குளிக்க, ஷவர்
பைப் லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.
