/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று ஓம் காளியம்மன் கோவிலில் பாலாலயம்
/
இன்று ஓம் காளியம்மன் கோவிலில் பாலாலயம்
ADDED : ஆக 28, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில் உள்ள ஓம் காளியம்மன் கோவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி தொடங்கவுள்ளது.
இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்வு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் மேற்கொண்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவை அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.