/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்; கட்சியினர் பங்கேற்க அழைப்பு
/
இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்; கட்சியினர் பங்கேற்க அழைப்பு
இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்; கட்சியினர் பங்கேற்க அழைப்பு
இன்று தி.மு.க., ஆர்ப்பாட்டம்; கட்சியினர் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 27, 2024 01:04 AM
ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கான எந்த சிறப்பு திட்டமும் இல்லை.
தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்ப-டவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் நடந்த, 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்-பட்டுள்ளது.எனவே, மத்திய பா.ஜ., அரசை கண்டித்து இன்று காலை, 10:00 மணிக்கு ஈரோடு காளை மாட்டு சிலை, ேஹாட்டல் சிம்னி அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.