/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்
/
கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்
ADDED : அக் 04, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடி காத்த குமரனுக்கு
இன்று 121வது பிறந்தநாள்
சென்னிமலை, அக்.4-
இந்திய விடுதலை போரின் ஒரு பகுதியாக, 1932 ஜன., 10ம் தேதி திருப்பூரில் விடுதலைப் பேரணி நடந்தது. இதில் இந்திய தேசியக்கொடியை கைகளில் ஏந்தி, வந்தே மாதரம் என கோஷமிட்டு, சென்னிமலையை சேர்ந்த குமரன் சென்றார்.
அப்போது ஆங்கிலேயர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் இறந்தார். இதனால் வரலாற்றில், கொடி காத்த குமரன் என்ற பெயர் பெற்றார். அவருடைய, ௧௨௧வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னிமலையில் உள்ள அவரது சிலைக்கு, பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

