/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரிப்பு
/
வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரிப்பு
ADDED : மே 20, 2024 02:34 AM
ஈரோடு: மழையால் தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர துவங்கி உள்ளது.
ஈரோடு, வ.உ.சி.பூங்கா தினசரி மார்க்கெட்டிற்கு, தற்போது தாளவாடி பகுதியில் இருந்து தான் தக்காளி வரத்தாகிறது. நேற்று ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வரும் நாட்களில், விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையால் விளைச்சல் குறைந்து அதன் எதிரொலியாக வரத்தும் குறைந்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
தாளவாடி பகுதியில் பெய்து வரும் மழையால், தக்காளி செடிகளில் காய் பிடிப்பதில்லை. மழைக்கு செடியில் பிடித்திருக்கும் காய்களும் அடித்து செல்கிறது. எனவே, விளைச்சல் வெகுவாக குறைந்து இருக்கிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு வரும் தக்காளியின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. 15 கிலோ கொண்ட கிரேடின் விலை, 500 ரூபாய். 25 கிலோ கொண்ட தக்காளி கிரேடின் விலை, 1,000 ரூபாய்.
எனவே தக்காளி கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரும் நாட்களில் திருமண முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷங்கள் வருகிறது. அப்போது தக்காளிக்கான தேவை பன்மடங்காக அதிகரிக்கும். வரத்து மேலும் குறைந்து தேவை அதிகரிக்கும் நிலையில் விலை மேலும்
உயரும்.
இவ்வாறு கூறினர்.

