ADDED : பிப் 19, 2024 11:03 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி.பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு தினமும் 800 முதல் ஆயிரம் டன் வரை காய்கறி கொண்டு வரப்படும்.
பனியால் விளைச்சல் குறைவு, முகூர்த்த சீசன், ஐயப்ப சுவாமி சீசன் உள்ளிட்டவற்றால் காய்கறி தேவை அதிகரித்தது. ஆனால், வரத்து குறைவாக இருந்தது. இதன் எதிரொலியாக காய்கறி விலை அதிகரித்தது. தற்போது காய்கறி வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக விலை சற்றே குறைந்துள்ளது.
மார்க்கெட்டுக்கு பெங்களூரு தக்காளி, 2,500 பெட்டி முதல் 3,500 பெட்டி வரை வரத்தாகும். ஆனால் இரு தினங்களாக 5,000 பெட்டி வரத்தாகிறது. இதனால் நேற்று தக்காளி கிலோ, 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதே போல் காய்கறிகள் விலையும் கிலோவுக்கு, 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
நேற்று காய்கறி விலை நிலவரம் (கிலோ-ரூபாயில்): கத்தரி-60, வெண்டை-40, புடலங்காய்-40, பாகற்க்காய்-60, பீர்க்கன்-60, முள்ளங்கி-40, கொத்தவரங்காய்-40, முருங்கை-60, பட்ட அவரை-60, கருப்பு அவரை-60, மிளகாய்-60, கேரட்-80, பீட்ரூட்-60, பீன்ஸ்-60, பட்டாணி-80, உருளைக்கிழங்கு - 40, சின்ன வெங்காயம்-30, பெரிய வெங்காயம்-35, முட்டைகோஸ்-40, காலி பிளவர்-25, பழைய
இஞ்சி-140.

