/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
/
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
ADDED : மே 21, 2024 11:37 AM
சென்னிமலை: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக விழா நாளை நடக்கிறது. முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 68ம் ஆண்டு வைகாசி விசாக பெருவிழா, சென்னிமலை கோவிலில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று மாலை ஊஞ்சலுார் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்கள், நாளை காலை, 7:30 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க மலை கோவிலை சென்றடைவர்.
அங்கு, 108 சங்குஸ்தாபனம், ஜெபம் உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, 3:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகம் நடக்கிறது. இதன் பிறகு மாலை, 5:௦௦ மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில், நாளை காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில், அருணகிரிநாதர் மட நிர்வாகி அருணகிரி மற்றும் நிர்வாக குழுவினர், கிருத்திகை விசாக குழு அன்பர்கள் மேற்கொண்டுள்ளனர்.

