தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாளை நாக பஞ்சமி கோவில்களில் பூஜை

நாளை நாக பஞ்சமி கோவில்களில் பூஜை

நாளை நாக பஞ்சமி கோவில்களில் பூஜை


ADDED : ஆக 16, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:நாகபஞ்சமியை முன்னிட்டு நாளை (17ல்) ஈரோட்டில் உள்ள பல்வேறு கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாக பஞ்சமியை முன்னிட்டு, சூரம்பட்டி முனியப்ப சுவாமி கோவிலில் உள்ள நாகம்மாவிற்கு நாளை காலை 8:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. 11:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. முன்னதாக விழாவை முன்னிட்டு இன்று மதியம் காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வருதலும், மாலையில் சிறப்பு யாகம் நடக்கிறது.

* இதே போல் ஈரோடு காரைவாய்க்கால் சுயம்பு நாகர் ஆலயத்தில், நாக பஞ்சமியை முன்னிட்டு நாளை காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமம், மூலவருக்கு பால் அபிஷேகம், புஷ்பாஞ்சலி நடக்கிறது. பிறகு தீபாராதனை காட்டப்படுகிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us