ADDED : ஜூலை 12, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ரேக்ளா பந்தயம், காங்கேயம் அருகே சிவன்மலையில் நாளை காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கிரிவலப்பாதையில் நடக்கிறது.
இதற்காக மலை அடிவாரம் பகுதியில் கால்கோள் பூஜை நேற்று நடந்தது. காங்கேயம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளருமான சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.