/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர் மலையில் கொட்டிய மழை காட்டாற்று வெள்ளத்தால் மலை கிராமம் துண்டிப்பு

ADDED : அக் 21, 2025 01:14 AM
அந்தியூர், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அந்தியூரை அடுத்த தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலை கிராமம் துண்டிக்கப்பட்டது.
பர்கூர் மலையில் தமிழக-கர்நாடக எல்லையில், வேலம்பட்டி மலை கிராமம் உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக கடம்பூர், குன்றி, மணியாச்சி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை கொட்டியது. இதனால் மணியாச்சி, வேலம்பட்டி, கர்கேகண்டி வழியாக மேட்டூர் அணைக்கு செல்லும் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலம்பட்டி மலை கிராமத்துக்கு செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தீபாவளியான நேற்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட, மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதேபோல் தாமரைக்கரை அருகே உள்ள தேவர்மலையில், இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வழுக்குபாறை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகிலுள்ள குரும்பபாளையம் மேடு வழியாக, எண்ணமங்கலம் ஏரிக்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.