/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு சித்ரவதை பெற்றோருக்கு வலை
/
சிறுமிக்கு சித்ரவதை பெற்றோருக்கு வலை
ADDED : மார் 10, 2024 02:04 AM
பவானி:ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோர் துன்புறுத்துவதாக, சிறுமியின் உறவினர்கள் கடந்த மாதம் 19ம் தேதி, மாவட்ட சைல்டு லைன் மையத்துக்கு புகார் தெரிவித்தனர்.
விசாரணையில், பவானி அடுத்த ஊராட்சி கோட்டையைச் சேர்ந்த ஆன்மிக போதகர் குணசேகரன், குழந்தையை நல்வழிப்படுத்துவதாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் தன் மனைவியுடன் சேர்ந்து, சிறுமியை அடித்து சூடு வைத்துள்ளனர்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்த போது, சித்ரவதை செய்தது உறுதியானது.
மாவட்ட சைல்டு லைன் மேற்பார்வையாளர் பிரியதர்ஷினி புகாரின்படி, தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோர் மற்றும் குணசேகரன், அவரது மனைவி வர்ஷா மகத் அதிதி ராஜமாதா ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

