/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்
/
அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்
அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்
அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்
ADDED : ஆக 16, 2025 01:45 AM
ஈரோடு,ஆடி மாத வெள்ளிக்கிழமை தோறும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஐந்து அம்மன் கோவில்களுக்கு, அரசு நிதியுதவியில் பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவதாக அற
நிலையத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த நான்கு வெள்ளி கிழமைகளில், முன்பதிவு செய்த பக்தர்கள் ஆன்மிக பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த வகையில், கடைசி வெள்ளிக்கிழமை
யான நேற்று, 71 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
முன்னதாக குடிநீர், சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு பை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் பவானி செல்லாண்டி
யம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு காலை, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில், அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அஞ்சுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.