/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : நவ 05, 2024 06:44 AM
கோபி: கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நேற்று அனு-மதிக்கப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இங்கு அருவியாக கொட்டும் தண்ணீரில் குளிக்க, நாள்-தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பவானிசாகர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கும்போதும், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கொடிவேரி அணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம், பவானி ஆற்றில், 866 கன அடி மழைநீர் சென்றதால், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று, 365 கன அடியாக நீர்வரத்து சரிந்ததால், காலை, 8:30 மணி முதல், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.