/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி
/
கொடிவேரியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி
கொடிவேரியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி
கொடிவேரியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : அக் 19, 2024 01:16 AM
கொடிவேரியில் 3 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகள் அனுமதி
கோபி, அக். 19-
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
கடந்த, 14ல் இரவு முழுவதும், சத்தியில், 23 மி.மீ., நம்பியூரில், 56, கொடிவேரியில், 19 மி.மீ., பெய்த பலத்த மழையால், பவானி ஆற்றில் வினாடிக்கு, 494 கன அடி மழை நீர் வெளியேறியது. இதனால், கடந்த 15 முதல், நேற்று முன்தினம் வரை மூன்று நாட்கள், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலை, 6:00 மணிக்கு, வினாடிக்கு, 326 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் தடுப்பணைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை செல்லும், வெளி மாவட்ட ஐயப்ப பக்தர்கள் கொடிவேரி தடுப்பணையில் நேற்று ஆனந்தமாக குளித்து சென்றனர்.