/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரியில் தண்ணீரின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
கொடிவேரியில் தண்ணீரின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொடிவேரியில் தண்ணீரின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கொடிவேரியில் தண்ணீரின்றி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நேற்று காலை முதல் பவானி ஆற்றில், 70 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தடுப்பணை வழியாக, தண்ணீர் அருவியாக கொட்டாததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பவானி ஆற்றில் குட்டையாக தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து சென்றனர்.