/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 23, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, வார விடுமுறை தினமான நேற்று, காலை முதலே சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர்.
தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் வெளியேறிய, 400 கன அடி தண்ணீரில் ஆனந்தமாக குளித்தனர். அங்கு சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்தும், சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.