/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை
/
ஈரோட்டில் வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை
ஈரோட்டில் வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை
ஈரோட்டில் வாரச்சந்தை அமைக்க வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை
ADDED : செப் 26, 2024 02:28 AM
ஈரோடு: ஈரோட்டில், தீபாவளிக்கு முன் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என, அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் மணிஷ்க்கு, ஜவுளி வியாபாரிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
இதுகுறித்து, ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: காந்திஜி சாலை, அசோகபு-ரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படு-கின்றனர். குறிப்பாக, தனி-யாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்ப-தில்லை. எனவே, மாநகரத்தின் மையப்பகுதியான கனி மார்க்கெட்டில், மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என மாநகராட்சி கமி-ஷனரிடம் இரண்டாவது முறையாக கோரிக்கை விடுத்துள்ளோம். ,
அமைச்சர் முத்துசாமியிடமும் வலியுறுத்தி இருக்கிறோம். வாரச்-சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள, 720 வியாபாரி-களும் பயன் பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய்
கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.