sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

/

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவு வாயிலை அடைத்த வியாபாரிகள்


ADDED : ஆக 23, 2024 04:31 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு ப.செ.பார்க் அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட் வணிக வளாகம் செயல்படுகிறது. வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் வாகனங்களை நிறுத்த, தனியாருக்கு ஏலம் விடப்-பட்டுள்ளது.

வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள ஜவுளி வியாபாரிகளின் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, வணிக வளாகத்தின் நுழைவுவாயிலை, வியாபாரிகள் நேற்று மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நுார்சேட் கூறிய-தாவது: வணிக வளாகத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை பெற்ற, 107 வியாபாரிகளுக்கு மட்டும் ஒரு வாகனத்தை கட்டணமின்றி நிறுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீதி வியாபாரிகள் வாகனத்தை நிறுத்துவதற்கு, 4 மணி நேரத்திற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கடையில் 2 அல்லது 3 வேலையாட்கள் பணி செய்கின்றனர். அவர்களது வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் வசூலிக்கின்றனர். வாடிக்கையாளர் வாகனம் நிறுத்த, 20 ரூபாய் கட்டணம் வசூலிப்-பதால், வணிக வளாகத்திற்குள் மக்கள் வரவே தயங்கி வருகின்-றனர். இதனால் எங்களுக்கு வியாபாரமும் பெரிதாக இல்லை.

எனவே, ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், ஊழியர்களின் வாக-னங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கி தர வேண்டும். மக்களிடம் வாகனம் நிறுத்த வசூலிக்கும் தொகையை ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாய் என நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரி-வியாபாரிகள் வாக்குவாதம்:

கனி மார்க்கெட் வணிக வளாக நுழைவுவாயில் மூடப்பட்ட தகவ-லறிந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள், நுழைவு வாயிலை திறந்து விட்டனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் 'வணிக வளா-கத்தின் கதவை அடைக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை. உங்களது பிரச்னைக்கு உங்கள் கதவை அடைத்து கொள்ளலாமே தவிர, மாநகராட்சி நுழைவு வாயிலை பூட்டக்கூடாது' என எச்ச-ரித்தனர். இதை எதிர்த்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us