/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு நிர்ணயித்த சுங்கத்தை மட்டுமே வசூலிக்க வியாபாரிகள் கோரிக்கை
/
அரசு நிர்ணயித்த சுங்கத்தை மட்டுமே வசூலிக்க வியாபாரிகள் கோரிக்கை
அரசு நிர்ணயித்த சுங்கத்தை மட்டுமே வசூலிக்க வியாபாரிகள் கோரிக்கை
அரசு நிர்ணயித்த சுங்கத்தை மட்டுமே வசூலிக்க வியாபாரிகள் கோரிக்கை
ADDED : மார் 09, 2024 01:17 AM
பெருந்துறை, பெருந்துறை தினசரி மார்க்கெட் சுங்க கட்டண வசூல் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக, பெருந்துறை திருவள்ளுவர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸிடம், நேற்று மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
பெருந்துறை தினசரி மார்க்கெட்டில், பேரூராட்சி நிர்வாகமே சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அரசிதழில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வசூல் தொகைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். மார்க்கெட்டில் உள்ள கழிப்பறையை, 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உள் வாடைக்கு விடுவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் கவின், பொருளாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் நாச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.