ADDED : அக் 13, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோட்டில் உள்ள வணிகர் சங்கங்களின் பேர-மைப்பு அலுவலகம் முன், மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்-தனர். யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகளுக்கு கட்-டணம் விதிப்பதால், சிறு, குறு வணிகர்களுக்கு கூடுதல் செலவினம் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார சுமைகளை தவிர்க்க, முடிவை கைவிட வேண்டும்.
டிஜிட்டல் பணி பரிவர்த்தனை வணிகர்கள் - பொதுமக்களுக்கு இடையே சிறந்த முறையில் நடக்கும் நிலையில், கூடுதல் செலவை ஏற்படுத்-துவதை தவிர்க்க வேண்டும் என்றனர். மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், ஒருங்கிணைப்-பாளர் பாலகிருஷ்ணன், சாதிக் பாட்ஷா, பால-முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
