/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பில் திணறல் கருங்கல்பாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : டிச 11, 2024 01:17 AM
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பில் திணறல்
கருங்கல்பாளையத்தில் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு, டிச. 11-
ஈரோடு மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பொன்னுசாமி தெருவில்,பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடியது.
மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டதில், பொன்னுசாமி தெருவில் இருந்து காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள சுத்திகரிப்பு நிலையம் வரை பல்வேறு இடங்களில், குழாயில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கசிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கருங்கல்பாளையத்தில் நடுரோட்டில் குழி தோண்டி பணியை தொடங்கினர்.
ஒரு வாரமாக குளறுபடிகளை சரி செய்ய முடியாமல், ஊழியர்கள் திணறி வருகின்றனர். பாதாள சாக்கடை சீரமைப்பு பணியால், ப.செ.பார்க்கில் இருந்து பள்ளிபாளையம், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஒரு வழி பாதையில் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால் கருங்கல்பாளையத்தில் பீக் அவர்ஸில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.