/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாறுமாறாக நிறுத்தப்படும் கார்களால் மேம்பால பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூன் 08, 2024 02:20 AM
ஈரோடு: ஈரோட்டில் முக்கிய சாலைகளாக மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என பல உள்ளது. இதில் மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை ரோடு, ஜி.ஹெச்.ரவுண்டானா பகுதிகளில் மேம்பாலத்தின் அடியில், இருசக்கர வாகனங்கள் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. அதேபோன்று வாடகை கார்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்தும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.