/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் 'டிராபிக் ஜாம்'
/
கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் 'டிராபிக் ஜாம்'
கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் 'டிராபிக் ஜாம்'
கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஆக 11, 2025 08:15 AM
ஈரோடு: ஈரோட்டில், கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. கடந்த மே, 5ம் தேதி முதல் ரயில்வே சார்பில், 40 நாட்கள் சீரமைப்பு பணி நடந்தது. இதற்காக பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 40 நாட்களுக்கு பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பாலத்தின் கீழ்புறத்தில் தண்ணீர் செல்லும் வகையில் இரும்பு ஜல்லடை வைத்துள்ளனர். ஆனால், சரிவர பொருத்தவில்லை. இந்த ஜல்லடை உள்ள பகுதி பழையபடி கீழே இறங்கி ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் வாகனங்கள் ஓரிரு வினாடிகள் நின்று மெதுவாக ஜல்லடையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வாகனங்கள் மெதுவாக பாலத்தின் கீழ் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துாரம் வரை அணிவகுத்து நின்றன. போக்குவரத்து வார்டன்கள் வந்த பிறகு, கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. டூவீலர்கள் பாலத்தின் மேல் பகுதியில் செல்ல அறிவுறுத்தப்பட்டன.