/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏரிக்கரையில் பழுதான டிராக்டரால் 'டிராபிக் ஜாம்'
/
ஏரிக்கரையில் பழுதான டிராக்டரால் 'டிராபிக் ஜாம்'
ADDED : அக் 24, 2025 01:04 AM
அந்தியூர், அந்தியூரை அடுத்த சங்கராப்பாளையம் பகுதியிலிருந்து நேற்றிரவு, 7:45 மணிக்கு, சோளத்தட்டு ஏற்றிய ஒரு டிராக்டர், கெட்டிசமுத்திரம் ஏரி வழியாக சென்றது. மையப்பகுதியில் சென்ற நிலையில் பிரேக் டவுன் ஆனது.
இதனால் கிருஷ்ணாபுரம்-சங்கராப்பாளையம் வழியாக செல்லும் வாகனங்களும், சுமைதாங்கியிலிருந்து அந்தியூர் செல்லும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் டிராக்டரிலிருந்து மற்றொரு டிராக்டருக்கு சோளத்தட்டு மாற்றும் பணி தொடங்கியது. அந்தியூர் போக்குவரத்து போலீசார் சென்று ஆய்வு செய்தனர்.
இதனால் அந்தியூரிலிருந்து செல்லும் வாகனங்கள் தண்ணீர்பந்தல்பாளையத்திலிருந்தும், சங்கராப்பாளையம் வழியாக வந்த வாகனங்கள் சுமைதாங்கியிலிருந்தும், குருநாதசுவாமி வனம் வழியாக திருப்பி விடப்பட்டன. பழுதான டிராக்டரை ஏரிக்கரையிலிருந்து அப்புறப்படுத்திய நிலையில், ஒரு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

