/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் குழாய் பொருத்தும் பணியால் அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்

ADDED : அக் 23, 2024 01:51 AM
குடிநீர் குழாய் பொருத்தும் பணியால்
அந்தியூரில் போக்குவரத்து நெரிசல்
அந்தியூர், அக். 23-
அந்தியூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 18 வார்டுகளுக்கு, ஜல் ஜீவன் திட்டத்தில், வீடுகள் தோறும், குடிநீர் கிடைக்க, குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலை பிரிவில் இருந்து கிழக்குபள்ளி பஸ்நிறுத்தம் வரை, சாலையில் குழி தோண்டி குழாய் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
இதனால் வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலை பிரிவில் இருந்து அந்தியூருக்கு செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதைக்கு மாற்றி விடப்பட்டன. ஏற்கனவே சாலை நடுவில் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளதால், சாலை குறுகலாக உள்ளது. தற்போது குறுகிய சாலையிலேயே நேருக்குநேராக வாகனங்கள் பயணித்ததால், கூடுதல் நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக காலை முதல் மதியம் வரை, ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.