sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுரோட்டில் அமைத்த போர்வெல் சென்னிமலையில் 'டிராபிக் ஜாம்'

/

நடுரோட்டில் அமைத்த போர்வெல் சென்னிமலையில் 'டிராபிக் ஜாம்'

நடுரோட்டில் அமைத்த போர்வெல் சென்னிமலையில் 'டிராபிக் ஜாம்'

நடுரோட்டில் அமைத்த போர்வெல் சென்னிமலையில் 'டிராபிக் ஜாம்'


ADDED : ஜூலை 21, 2025 04:58 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை டவுனில் குடியிருப்பு பகுதியில், நடுரோட்டில் போர்வெல் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்புடன், விபத்து அச்சம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது:

சென்னிமலை டவுன் மையப்பகுதி-யாக தினசரி மார்க்கெட் உள்ளது. இதன் அருகில் நுாற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். பிரதான சாலையில் இருந்து அப்ப-குதிக்கு செல்லும் சாலை மையப்ப-குதியில் பேரூராட்சி சமீபத்தில் போர்வெல் போட்டனர். வழக்க-மாக தெருவோரத்தில் போர்வெல் அமைப்பது வழக்கம். இங்கு வழக்-கத்துக்கு மாறாக அமைத்துள்ளனர். மேலும் போர்வெல் போடப்பட்ட இடத்தை சரியாக மூடாததால் சில வாகனங்கள் குழிக்குள் இறங்கி-யது. இதையடுத்து கான்கிரீட் சிலாப்பை போர்வெல் உள்ள இடத்தில் நடுரோட்டில் போடுவ-தற்காக வைத்துள்ளனர். இதன் பிறகும் பெரிய சரக்கு வாகனங்கள் செல்லும்போது குழிக்குள் இறங்க நேரிடும். இரவில் விபத்து வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. போர்வெல் போடுவதற்கு முன், அதிகாரிகள் தக்க இடத்தை தேர்வு செய்து போக்குவரத்திற்கு இடை-யூறு இல்லாத வகையில் அமைத்தி-ருந்தால், இந்த பிரச்னைக்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு மக்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us